அனைத்து முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி செயற்படாடுகளின் இறுதி தினம் மற்றும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தினங்களில் திருத்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரண்டாம் தவணைக்கான விடுமுறை, நாளை தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி வரை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பண்டிகை காரணமாக இந்த விடுமுறை தினங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி , அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை தொடக்கம் வழங்கப்படவிருந்த இரண்டாவது தவணைக்கான விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் , அதற்கு பதிலாக இம்மாதம் 31ம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 11ம் திகதி வரை விடுமுறையை பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள், மூன்றாம் தவணைக் கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.