எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில்,
சில வாகனங்களில் வரியானது இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார்.
அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.