இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக, பங்களாதேஷின் சவாலை ஏற்றுக்கொள்ள இலங்கை அணி தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை, ஆனால் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். வனிது இல்லாதது பெரிய இழப்பு, ஆனால் அவரது இழப்பால் அணியை கீழ் நோக்கி கொண்டு செல்ல முடியாது. இருக்கும் வீரர்களின் அதிகபட்ச திறமையை கொண்டு அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வதே தலைவர் என்ற வகையில் எனது எதிர்பார்ப்பாகும்” என்றார்.
தசுன் ஷானகவின் நம்பிக்கை!
