• Sun. Oct 12th, 2025

“சாய்ந்தமருது மக்களின் கனவை நனவாக்கிய பெருமை மு.கா .வையே சேரும்” – ஏ.சீ. யஹியாகான்

Byadmin

Aug 18, 2017

சாய்ந்தமருதிற்கு கிடைக்கவிருக்கின்ற உள்ளூராட்சி சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தவிர வேறு எவரும் பதிவு வைக்க வரத்தேவையில்லை. ஏனெனில் இந்த மக்களின் நீண்ட கால கனவினை நனவாக்கிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையே சேரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசனின் தலைவருமாகிய ஏ.சீ. யஹியாகான் அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் சாய்ந்தமருது வாழ் மக்களின் நீண்டகால தேவையாகவிருந்த உள்ளூராட்சி சபை பற்றி விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , நான் உட்பட கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர்ஏ.எல்.அப்துல் மஜீட், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் போன்றோர் தலைவரிடத்தில் பல தடவைகள் இது சம்பந்தமாக எடுத்துக் கூறியிருந்தோம். இது தொடர்பாக தலைவர் எடுத்த பல முயற்சியின் பலனாகவே  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக கல்முனை சந்தாகேணி விளையாட்டு மைதானத்திற்கு வந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மிக விரைவில் சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி சபையை வழங்கவிருக்கின்றேன் என மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தார்..

ஆனால் இன்று சில வங்கரோத்து அரசியல் வாதிகள் எவரோ பெற்ற பிள்ளைக்கு தன் பிள்ளை என நினைத்து பெயர் வைக்க முனைவது வேடிக்கையான விடயம் என்றார். மேலும் அவர்கள் எங்கள் தேசிய தலைவர் மற்றும் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் தான் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை வழங்காவிடாமல் தடுக்கின்றார்கள் என குற்றம் சாட்டுகின்றார்கள், அவர்கள் முதலில் ஒரு விடயத்தை தெளிவாக விளங்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது சாய்ந்தமருதிற்கு மட்டும் உரிய கட்சியல்ல மாறாக இலங்கை வாழ் முஸ்லிம்கள்அனைவருக்கும் உரிய ஒரு பேரியக்கம்  ஆகவே நாங்கள் அவசரமாக எந்த முடிவினையும் எடுக்க முடியாது  ஏனெனில் ஒரு பிரதேசத்திற்கு நன்மையாக இருக்கின்ற ஒரு விடயம் ஏனைய பிரதேசத்திற்கு தீமையாக அமையாத வகையில் எங்களது முடிவுகள் அமைய வேண்டும் என்பதற்காக சில தாமதங்கள் என்றார்.

மேலும், நாங்கள் தான் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை பெற்று கொடுக்க பாடுபட்டவர்கள் என ஒப்பாரி இடுகின்றவர்கள் முடிந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனுசரணை இல்லாமல் சாதித்து காட்ட முடியுமா? இவர்கள் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது. அப்படி முடியும் என்றிருந்தால் மஹிந்த அரசாங்கத்தின் செல்லப்  பிள்ளையாகவிருந்த முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் அதாவுல்லா அவர்கள் என்றோ செய்து காட்டியிருப்பார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *