அர்ஜுன் அலோஸியஸிடம் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்றையை தினம் ஆறாவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (12) அவரது இல்லத்திற்கு சென்று இந்த அழைப்பாணை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.