ஆறு மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊழியர்கள் இன்றும்(13) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
சைட்டம் எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து தாங்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவின் உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொம்பகே கூறியுள்ளார்.
இந்த வகையில், வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மொணராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் குறித்த வேலை நிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றும்(12) பல மாவட்டங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.