• Mon. Oct 13th, 2025

புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு, அமைச்சரவை அனுமதி!

Byadmin

Sep 14, 2017
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று -13-  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள்.
நகர மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் வெளியேற்றப்படுகின்ற திண்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு புத்தளம் – அருவக்காலு பகுதியில் கழிவகற்றுவதற்கு உகந்த வசதிகள் அடங்கிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில், குறித்த பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை வெளியேற்றும் தொகுதியினை அமைப்பதற்கும், அப்பணியினை 2020ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *