அச்சுவேலி வளலாய் பகுதியில் சொகுசு கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் வீதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளஞனின் கால் பாதமொழயுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் கூறினர்.
இச் சம்பவம் நேற்று(13) மதியம் இடம்பெற்றுள்ளது. வளலாய் பகுதியில் இருந்து இடைக்காடு பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது தம்பாலை பகுதியில் இருந்து வளலாய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றதாக ஸ்தல விசாரணையில் தெரியவந்துள்ளது.
சக்கோட்டை பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த தேவராஜா பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த தேவராஜா கிஷோத்குமார் வயது(26) என்ற நபரே கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சாரதியை இன்று(14) மல்லாகம் நிதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-Farook Sihan –