முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் காணி கொள்வனவு மற்றும் சொகுசு மாடிக்கட்டட நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி வழங்கியமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க வருமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.