• Sat. Nov 1st, 2025

மரணத் தண்டனை கைதி 35 வருடங்களின் பின்னர் கைது!

Byadmin

Apr 19, 2024

நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுத் துண்டாக வெட்டி மறைத்து வந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 68 வயதுடையவர் எனவும், அவர் தனது தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் தனது அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான சந்தேகநபரின் மனைவியும் மறைந்திருந்த நிலையில் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *