முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படும் விவகாரத்தில் தொடர்ந்தும் நீதியை மாத்திரமே நாடிக்கொண்டிருக்கின்ற போதிலும் பொலிசார் இரட்டை வேடமிட்டு அநீதியிழைப்பதாக தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டான் பிரியசாத், அமித், சித்தாரத்ன போன்றவர்களுக்கு எதிராகபொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ததன் பின் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் ,
முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது மாத்திரம் பிணை வழங்க முடியாத வகையில் கைது செய்கின்ற போதிலும் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் அலட்சியப் போக்கே காணப்படுவதாகவும் இந்நிலை தொடருமாக இருந்தால் அரசின் மீதான சலிப்பு இன்னுமொரு மாற்றத்தைக் கொண்டு வர தூபமிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.