சர்வதேச ஆசிரியர் தினமான இன்று(06) கொழும்பில் திட்டமிட்டப்படி எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் – அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.