ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குதல் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(06) ஹம்பாந்தோட்டை நகரில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு, நீதிமன்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டபடி எதிர்ப்புப் பேரணி நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதலால், தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது (10:22 AM)குறித்த பேரணிக்கு ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.