காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமே துந்துவை ஆகும். வந்தோரை வரவேற்கும் சிங்கார துந்துவையாம். துந்துவை என்றால் வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ சொல்லி முடிக்க முடியாது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் / ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல் துந்துவை வரலாற்றில் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தன.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஒரு அடிக் கல்லே இந்த விழா என்பதும் குறிப்பிடத் தக்கது.
-முஸ்லிம்வொய்ஸ் சஹீர்தீன்