தாய்வானில் இடம்பெற்ற 1.1 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவர் என்.எம்.எஸ்.முணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணை பிரிவினர் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானின் ஈஸ்ட்ரன் வங்கியில் இருந்து இலங்கையில் வங்கி கணக்கொன்றுக்கு நிதிமாற்றம் மேற்கொண்ட சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவுள்ளார்.