உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான 24 மணி நேர சேவை மே 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் சாதாரண மற்றும் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.