• Sun. Oct 12th, 2025

வாட்ஸ்அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Byadmin

May 4, 2025

பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களை ஊடுருவி, சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்கள் கும்பலை வழிநடத்தும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்து வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பும் இந்த ஹேக்கர்கள், இந்த மோசடியை மிகவும் நுட்பமான முறையில் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.எக்காரணம் கொண்டும் தங்கள் வங்கிக் கணக்குகளின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று பொலிஸ் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களில் கணினி குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இலங்கைக்கு வந்திருந்த நைஜீரிய கணினி குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்புடைய வாட்ஸ்அப் எண்களின் உரிமையாளர்கள், ஹேக்கர்கள் பணம் சேகரிக்கும் வங்கிக் கணக்குகள் குறித்து மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கும் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த உரிமம் பெற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் பெறுகின்றமை தொடர்பில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு அவதானித்துள்ளது.இந்த சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு, ஹேக்கர்கள் நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் கணக்கு எண்களை இந்த நோக்கத்திற்காக வழங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

அந்த வாட்ஸ்அப் பயனர்கள், இந்த ஹேக்கர்கள் பயன்படுத்தும் கணக்குகள் குறித்து தொடர்புடைய வங்கிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட துறைகள் சம்பந்தப்பட்ட கணக்குகளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கர்கள் வெளிநாட்டிலிருந்து இந்த செயல்முறையை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *