• Sun. Oct 12th, 2025

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Byadmin

May 5, 2025

நாற்பத்தி நான்குலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் (445,000) ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவரை திங்கட்கிழமை (05) அன்று காலை விமானநிலைய சுங்கஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் குருநாகலைச் சேர்ந்த 29 வயதுஇளைஞன்,துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

சுங்கஅதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்ப, அவர்இந்த சிகரெட்டுகளை துபாயிலிருந்து வாங்கி,பஹ்ரைனுக்கு வந்து,அங்கிருந்து Gulf Air விமானம் GF-144 இல் கட்டுநாயக்க விமானநிலையத்திற்குப் வந்தார்.

அவர் தனது பொருட்களில் கொண்டுவந்த சிகரெட்டுகள் “பிளாட்டினம் டபுள்மிக்ஸ்”(Platinum Double Mix) என்று அழைக்கப்பட்டன, இது இரண்டு” சுவிட்சுகள்” கொண்டு செயல்படுத்துவதன் மூலம்இரண்டுசுவைகளை உருவாக்கக்கூடிய ஒரு வகை சிகரெட் ஆகும்.

இது போன்ற 25,400 சிகரெட்டுகள் அடங்கிய 127 சிகரெட் அட்டைப் பெட்டிகளை சுங்கஅதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முறையான சுங்கவிசாரணை நடத்தப்பட்டு, சிகரெட் கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்டு, இவற்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த பயணிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *