• Sun. Oct 12th, 2025

சட்டத்தரணிகளின் உணவில் புழுக்கள்

Byadmin

May 25, 2025

மட்டக்களப்பு, நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவுக்காக பிரபல உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதனைகள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்தனர் 

இதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த, காலாவதியான சமைத்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புளியந்தீவு பதில் பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன் ராஜ் தெரிவித்தார் 

குறித்த உணவு பொதிகளை பிரித்து சாப்பிட முற்பட்ட போது அதற்குள் இருந்து புழுக்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *