இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லாஹூரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் தானும் கலந்து கொள்ளப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேச கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தம்மால் காவற்துறை மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நாட்டு பிரதி காவற்துறை மா அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி இந்நாட்டில் இடம்பெற்ற போட்டிகளில் பங்கு பெற இலங்கை வந்ததாகவும் , யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.