வில்பித்து வனபிரதேசத்தை அழித்து முஸ்லிம்கள் சட்டத்துக்கு முரணான குடியேற்றங்களை அமைத்து வருவதாக இதுவரை காலம் குற்றம் சுமத்தி வந்த பொது பலசேனா அமைப்பு அந்தக் குற்றச் சாட்டுக்களிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை விடுவித்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தையின் போதே இவ் இணக்கப்பாட்டுக்கு அவ் அமைப்பு வந்துள்ளது.
நடை பெற்ற கலந்துரையாடலில் கலாநிதி ஏ.எஸ்.எம்.நெளபல் வில்பத்துவில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், பூர்வீக காணிகள், அவற்றின் எல் லைகள் என்பன தொடர்பில் விரி வாக விளக்கமளித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதிகள் வில்பத்து விவகாரம் தொடர்பில் சமூகத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடாத்தி வடக்கில் முஸ்லிம்களை மீள்குடி யேற்றும் நடவடிக்கைகளுக்கு ஆத ரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.
இக்கலந்துரையா டலில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர், பூரீலங்கா முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, தேசிய ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஐந்தாம் கட்ட பேச் சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது பொதுபலசேனா மத்ரஸாக்கள் தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
-ஏ.ஆர்.பரீல்-