இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டோஹா நகரில் உள்ள ஸ்டாவோட் இலங்கை பாடசாலையை பார்வையிட்டுள்ளார்.
தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையான இலங்கை மாணவ, மாணவிகள் 1300 பேர் இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலகில் எங்கிருந்தாலும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, டோஹா இஸ்லாமிய தொல்பொருள் நிலையத்தையும் நேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.