ஏழாவது உலக பெளத்த உச்சி மாநாடு – 2017 நவம்பர் 2 முதல் 7 ஆம் திகதிவரை இலங்கையில்
கொழும்பில் உள்ள அலறி மாளிகையில் நடைபெறவிருக்கும் இந்த உச்சிமாநாட்டில் 47 நாடுகளில் இருந்து சுமார் 300 சங்கம் நாயகர்கள், மற்றும்துறவிகள் பங்குபற்றவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில்விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நவம்பர் 2 ம் திகதிஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டின் 3 ஆம் திகதி மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிமுக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் நிகழ்வு நவம்பர் 5 ம் தேதி நடைபெறும் அதேவேளை அநுராதபுரம்மற்றும் கண்டி ஆகிய இரு நகராங்களை நோக்கி நவம்பர் 6, மற்றும் 7 ஆம்திகதிகளில் இரண்டு ஆய்வுப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.