“எவ்வகையான தேர்தலுக்கும் நாம் முகம் கொடுக்கத்தயார்” – பஸில்
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குரிய 36.5 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பஸில் ராஜபக்ஸ,
தேர்தல் நடக்கும் எனறு எதிர்பார்க்கின்றோம். இதனால் தேர்தலுக்கு ஆயத்தமாகின்றோம். எவ்வகையான தேர்தலுக்கும் நாம் முகம் கொடுக்கத்தயார்.” என குறிப்பிட்டுள்ளார்.