• Sat. Oct 11th, 2025

ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய பாம்பை விட கொடிய விஷங்கள்!

Byadmin

Oct 4, 2025

விஷத்திற்கு முதன்மை விளங்கும் பாம்பு, தேள் ஆகியவற்றை விட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், ரசாயனங்கள் போன்றவற்றில் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை உள்ளது.

இவற்றில் பெரும்பாலானவற்றை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் பட்டாலோ மரணத்தை உண்டாக்குமாம்.

சயனைடு(Cyanide)

சயனைடு மிகவும் கொடிய விஷமாகும். இந்த சயனைடு ஒரு வர்ணமற்ற கேஸ் அல்லது கிறிஸ்டல் ஆகும்.

இது கசப்பான பாதாமை போன்ற வாசம் கொண்டதாகும். இதை நுகர்ந்தால் தலைவலி, குமட்டல், மூச்சு திணறல் ஏற்படுவதுடன், இதய துடிப்பு குறையும்.

இந்த அனைத்து அறிகுறிகளுமே சயனைடை நுகர்ந்த ஓரிரு நிமிடத்தில் ஏற்படுவதோடு, உடலில் உள்ள ஆக்ஸிஜன் செல்களை அழித்து மரணத்தை உண்டாக்கும்.

ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம்(Hydrofluoric acid)

டெஃப்ளான் உற்பத்தியில் ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மமாக இருக்கும் போது எளிதாக சருமத்தின் வழியாக ரத்த நாளங்களை அடைந்து, கால்சியத்துடன் கலந்து எலும்புகளை அழிக்கும்.

ஆனால் இது உடலோடு தொடர்பு ஏற்படுத்தும் போது பெரிதாக வலியை ஏற்படுத்தாமல், சேதமாக்க சிலமணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஆர்செனிக்(Arsenic)

ஆர்செனிக் எனும் விஷமானது ஆயுதங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சில மணி நேரத்தில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது.

இந்த விஷம் உடலில் ஊடுருவிய உடன் வாந்தி, பேதி உண்டாகும்.

பெல்லடோனா (Belladonna)

பெல்லடோனா என்பது விஷத்தன்மை கொண்ட மூலிகை மலராகும். இதில் உள்ள அட்ரோபைன் எனும் பகுதியில் இருந்து விஷத்தன்மை உருவாகிறது.

இதன் அனைத்து பாகங்களும் விஷத்தன்மை கொண்டுள்ளது. அதிலும் இதன் வேர் மிகவும் விஷத்தன்மை கொண்டது. இதன் மலரை இரண்டு சாப்பிட்டாலே மரணித்து விடுவார்கள்.

கார்பன் மோனாக்சைடு(Carbon monoxide)

வாசம், நிறம் மற்றும் சுவை இல்லாத குறைவான காற்று தான் கார்பன் மோனாக்சைடு. இதன் விஷத்தன்மை உயிரை கொள்ளும் வீரியம் கொண்டுள்ளது.

இது ஒருவர் உடலில் ஊடுருவி விட்டால் காய்ச்சல், தலைவலி, வலுவின்மை, உறக்கமின்மை, குமட்டல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

பீச் ஆப்பிள் மரம்

இந்த மரம் மன்சினில் (manchineel) அல்லது கிரீன் ஆப்பிள் மரம் என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த மரம் வட அமெரிக்காவில் ப்ளோரிடாவில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பச்சை நிற பழங்கள் இனிப்பானது. ஆனாலும் இதை சாப்பிடக் கூடாது என்றும் இந்த மரத்தை தொடவோ, அருகில் உட்காரவோ கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

டையாக்சின்(Dioxin)

இதில் வெறும் 50 மைக்ரோ கிராம் அளவு இருந்தாலே மரணம் ஏற்படும். அறிவியலில் இது மூன்றாம் மிகக்கொடிய விஷமாக காணப்படுகிறது. இது சயனைடு விட 60 மடங்கு அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.

அகோனைட் (Aconite)

நச்சு செடி வகையை சேர்ந்த இது விஷங்களின் ராணி என்ற பெயர் கொண்டது. இதன் வீரியம் அதிகம். இது நீளம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இச்செடியை ஒருசில தசாப்தங்களுக்கு முன் ஆட்கொல்லி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

அமடாக்ஸின் (Amatoxin)

சில கொடிய வகை காளானில் இது காணப்படுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களின் செல்களில் தாக்கத்தை உண்டாக்க கூடியது.

அதன் பின் நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை உண்டாக்கும் விஷத்தன்மை கொண்டது.

ஆந்த்ராக்ஸ்(Anthrax)

ஆந்த்ராக்ஸ் என்பது உண்மையில் Bacillus anthracis எனப்படும் ஒரு பாக்டீரியா. இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க செய்யும்.

சருமம் வழியாக அல்லது உடலுக்குள் உட்செலுத்துதல், சுவாசித்தல் மூலமாக உடலுக்குள் ஊடுருவினால், 75% மரணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எம்லாக்(Hemlock)

எம்லாக் என்பது பண்டையக் காலத்து விஷம். இதை சாப்பிட்டால் தலைசுற்றல், தசை பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதன் பின் மரணித்து விடுவார்கள்.

மெர்குரி(Mercury)

காய்ச்சல் உள்ளவர்களை சோதிக்க தெர்மா மீட்டரை வாயில் வைப்பார்கள். அதில் உள்ள மெர்குரியை உட்கொண்டாலோ, சுவாசித்தாலோ அது விஷத் தன்மையாக மாறிவிடும்.

அதன் பின் சிறுநீரக செயலிழப்பு, நினைவுத்திறன் இழப்பு, மூளையை சேதப்படுத்துதல், பார்வை இழத்தல், நரம்பு மண்டலத்தை தாக்குதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மரணிக்க செய்கிறது.

பஃபர் மீன் (Puffer Fish)

சில நாடுகளில் ஃபுகு (Fugu) என்று அழைக்கப்படும் இதன் உடல் பாகங்களில் Tetrodotoxin இருக்கிறது. இந்த மீன் மூலம் வருடத்திற்கு ஜப்பானில் 5 பேர் உயிரிழக்கிறார்கள்.

ரிசின் (Ricin)

இது ஆந்த்ராக்ஸ் விஷத்தை விட விரைவில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. இதை நுகர்ந்து பார்த்தாலே மரணித்து விடுவார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *