• Sat. Oct 11th, 2025

பக்கவாதம், புற்று நோய் வராமல் தடுக்கும் அற்புதமான ஜூஸ் பற்றி தெரியுமா..?

Byadmin

Oct 5, 2025

கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. இது இந்தியாவில் கிடைக்கும் பழவகை ஆகும். எல்லாருக்கும் நல்லா தெரியும் தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய் வராமல் தடுக்கும் என தெரியுமா? ஆமாங்க நாம் மிகவும் பயப்படக்கூடிய நோயான புற்று நோய் வராமல் தடுக்கிறது. ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் நாம் விரும்பும் ஒருவருக்கு புற்று நோய் இருந்தால் நமது மனது துடி துடிக்கும் வலி வார்த்தைகளால் சொல்ல முடியாது அல்லவா?

எனவே தான் இந்த நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். கேன்சர் என்பது நமது உடலில் உள்ள செல்கள் அசாதாரணமாக எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். இந்த செல்கள் வளர்ச்சி பெற்று டியூமரை உண்டாக்குகிறது.

இந்த டியூமர் நமது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை அழித்து விடுகின்றன. இதனால் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய வகையான கேன்சர்கள் உள்ளன : மார்பக புற்று நோய், இரத்த புற்று நோய், நுரையீரல் புற்று நோய், பிரைன் டியூமர் போன்றவைகள் உள்ளன.

அடுத்து நம்ம பார்க்க போவது பக்கவாதப் பிரச்சினை இவற்றில் மூளை பாதிப்படையும். இதற்கு காரணம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதாலும் இரத்தம் கட்டுவதாலும் ஏற்படுகிறது. எனவே தான் பக்கவாதம் வந்தவர்கள் தங்களது கை, கால் மற்றும் உடம்பை அசைக்க முடியாமல் போகிறது.

அவர்களது வாழ்க்கையும் ஓய்விலேயே நகர்கிறது. எனவே இந்த கொடூரமான விளைவுகளை உண்டாக்கும் இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தான் சிறந்தது. இந்த இரண்டு நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தர்பூசணி பயன்படுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் நோய்க்கு எதிரான மாற்றத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தனும் என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *