• Sat. Oct 11th, 2025

சக்கரை நோயா..? பயம் வேண்டாம் கட்டுப்படுத்த தினமும் இதில் அரை டம்ளர் குடிங்க..!!

Byadmin

Oct 5, 2025

இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது. டீக்கடையில் கூட நடுத்தர வயதினரை கண்டால், டீக்கடைக்காரர் சர்க்கரை கம்மியாக போடவேண்டுமா? என்ற கேள்வியை கேட்ட பிறகே டீ போடுகின்றார்.

அதற்கு காரணம் நடுத்தர வயதினர் அதிகமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதே.

ஏன் பிறந்த குழந்தைக்கே இந்நோய் உள்ளது. இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்படுகின்றது.
நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா, பாட்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரை கேளுங்கள் அவர்களுடைய தாத்தா, பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாருகளா? என்று இல்லை ஒரே பதில் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெறும்.

அப்படி இருந்தும் ஏன் இப்படி பரப்புகின்றார்கள் என்றால். இன்றைக்கு நாம், நாளை நம் பிள்ளைகள், அதன்பிறகு பேரப்பிள்ளைகள்.


பேரப்பிள்ளை காலங்களில் இது பரம்பரை நோய் என்றே நம்பப்படும்.

சர்க்கரை என்பது நோயா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் 24 வகையான சர்க்கரை நோய் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவத்தில் மதுமேகம் என்று அழைக்கின்றனர்.

மது என்றால் இனிப்பு என்று அர்த்தம்.

சர்க்கரை நோய் இன்று மரபு பழக்கவழக்கங்கள் மாறுப்பாட்டினால் ஏற்படுகின்றது. அது மட்டுமில்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களும் செயற்கையான முறையில் இந்த நோயை உறுவாக்கின்றனர். அதைப்பற்றி முழுமையாக அடுத்ததோர் பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கூறுகின்றேன்.

சர்க்கரை நோய்க்கு வீட்டு வைத்தியம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் 5 நித்யகல்யாணி மலர் இதழ்களை போட்டு அத்துடன் சிறிது மிளகு தூளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, அறை டம்ளராக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து. அதனை காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் அருந்தி வர சர்க்கரை நோய் குறைந்து, கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

குறிப்பு: உணவிற்கு பிறகு நாம் துவர்ப்பு சுவையை சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் உடல் சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கும். அதற்காகதான் நம் முன்னோர்கள் வெற்றிலை சீவல் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். இன்று நாகரீகம் என்ற பெயரில் அந்த பழக்கவழக்கம் கைவிடப்பட்டுள்ளதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்த நோய்க்கு காரணம். சிறிது கொட்டை பாக்கை உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *