ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் அடுத்த வருடம் ஜனவரி 19 ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அடுத்த ஆண்டில் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் குறித்த இருதரப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.