• Sat. Oct 11th, 2025

காலையிலேயே வாய் துர்நாற்றம் வீசுவது இந்த காரணங்களால் தானாம்..!

Byadmin

Oct 5, 2025

காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். இதற்கு காலையில் எழுந்த பின் அனைவரது வாயும் நாற்றம் அடிப்பதே முக்கிய காரணம். இந்த துர்நாற்றத்தைத் தடுக்க, பலரும் இரவில் பற்களை துலக்கிவிட்டு படுப்பார்கள். இருப்பினும் காலையில் வாய் நாற்றம் போன பாடில்லை. 90 சதவீத மக்களின் வாய் காலையில் எழுந்ததும் அருகில் செல்ல முடியாத அளவில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். இதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அதில் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், ஏன் சுத்தமில்லாமை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது காலையில் ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று பார்ப்போம்…

வாய் வறட்சி
பகலில் அவ்வப்போது தண்ணீர் குடித்து வருவோம். மேலும் எச்சிலின் சுரப்பும் இருக்கும். ஆனால் இரவில் இவை இரண்டுமே இல்லாததால், வாய் நீண்ட நேரம் வறட்சியுடன் இருந்து, துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.


உணவுத் துகள்கள்
வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற சுரக்கப்படும் எச்சிலின் சுரப்பு இரவில் குறைவாக இருப்பதால், பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுகளை சாப்பிட வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இரவில் வெளிவந்து அதனை சாப்பிட்டு, ஆங்காங்கு ஓடியாடி சந்தோஷமாக விளையாடுவதால், துர்நாற்றம் வீசுகிறது.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
புகைப்பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ இருந்தால், அவை வாயின் ஆரோக்கியத்தை கெடுத்து, எந்நேரமும் வாய் துர்நாற்றத்துடன் இருக்குமாறு செய்யும்.


ஆரோக்கிய பிரச்சனைகள்
உடலில் பிரச்சனை இருந்தால், அதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, காய்ச்சல் இருந்தால், சிறுநீரகத்தில் பிரச்சனை ஏதேனும் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே அவ்வப்போது உடலை பரிசோதித்து, பிரச்சனை இருந்தால் உடனே கவனித்து போதிய சிகிச்சை எடுத்து வாருங்கள்.


குறட்டை
உடல்நல நிபுணர்கள், குறட்டைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். குறட்டை விடும் போது வாய் திறந்தவாறு இருப்பதால், வாய் வறட்சியடைந்து, அதனால் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றும் கூறுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *