பெற்றோல் பற்றாக்குறை தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் மூவர் அடங்கிய குழு நியமனம்..
நாட்டில் நிலவும் பெற்றோல் பற்றாக்குறை தொடர்பில் ஆராயவும், இதற்கான தீர்வு குறித்து பரிந்துரை செய்யவும் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் கோரிக்கைக்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த இந்தக் குழுவை நியமித்துள்ளார்.
குறித்த இந்தக் குழுவில் அமைச்சர்களான, பாட்டளி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.