புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்
பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சங்கங்கள் பல இணைந்து நாளை(08) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளன.
இதற்கு முன்னர் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை புகையிரத கட்டுப்பாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மேற்குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த நிலையில், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.