உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் ஆர்.ஆர்.ரி. அமைப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொண்டது போலவே தொடர்ந்தும் சமூக நலன்களில் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் உலமா சபையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி , பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், பிரதித் தலைவர் அஷ் ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.