மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்
இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் சிறப்புப் பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் இதுவரையில் கிடைக்க வில்லை என நுகர்வோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கையில்; குறித்த இந்தப் பலன் நுகர்வோருக்குக் கிடைப்பதற்கு இன்னும் சில நாட்கள் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.
அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த வாரமளவில் வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிப் பொருட்களுக்கான புதிய விலை நிர்ணயிப்பதற்குரிய ஆரம்ப கட்டப் பேச்சு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் அதிகார சபையினால் விலைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.