(வீடியோ இணைப்பு) கிந்தொட்டை சம்பவத்தில் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.
காலி-கிந்தொட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தடுக்கமுடியாமல் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் போனமை பாரிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிந்தொட்டை சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் சிறப்பாக பொலிஸார் செயற்படவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.