விமல் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜினாமா
தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியன்ஜித் வித்தாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போதே, பிரியன்ஜித் வித்தாரன தனது இராஜினாமாக் கடிதத்தை வழங்கியதாக தேசிய சுதந்திர முன்னணியின் இளைஞர் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பத்மா உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே பிரியன்ஜித் வித்தாரன இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் பியசிறி விஜயநாயக்கவும் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவை விமர்சனம் செய்து அண்மையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது