பெருந்தொகை பணத்தை கடத்த முற்பட்ட கொழும்பு வர்த்தகர் கைது
23,20,000 இலங்கை ரூபாய்களை சட்டவிரோதமாக துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட இவர், கொழும்பைச் சேர்ந்த 46 வயதான வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
20,000 ரூபாய்களை மட்டுமே விமான நிலையத்தின் ஊடாக வௌிநாடு செல்கையில் கொண்டு செல்ல முடியும், இதற்கு மேற்பட்ட தொகையை கொண்டு செல்ல சுங்கப் பிரிவினரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.