8 மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட காலி வர்த்தகரின் மகள் மீட்பு
சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் காணா மல் போனதாக கூறப்படும் காலி பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் 16 வய தான மகள் ஹோமாகமயில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம பகுதியில் சிறிய வீடொன்றில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீட்டதாக பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றால், தந்தையையும் தாயையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியே சந்தேக நபர் அவரை அங்கு சிறைவைத்திருந்துள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு கடத்தல், தடுத்து வைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடத்தலுக்குள்ளான சிறுமியின் தந்தையிடம் சாரதியாக செயற் பட்டவர் எனவும் அவர் தொழில் கவனமின்மை காரணமாக நீக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.