• Sun. Oct 12th, 2025

‘ரயில் சேவை அத்தியாவசிய சேவை’ தீர்மானம் பாராளுமன்றில்நிறைவேற்றம்

Byadmin

Dec 11, 2017

‘ரயில் சேவை அத்தியாவசிய சேவை’ தீர்மானம் பாராளுமன்றில்நிறைவேற்றம்


ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானம் பாராளுமன்றில் சற்றுமுன்  பெரும்பான்மையால் நிறைவேற்றபட்டது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக எடுக்கபட்ட  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை,  புகையிரத பணியாளர்கள் அடிக்கடி முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில், குறித்த துறைகளில் இராணுவத்தினரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட இராணுவத்தினர் இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி புகையிரத சேவைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக ​அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் மிரட்டல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் புகையிரத பணியாளர்களுக்கு எதிராகவும், அத்தியாவசிய சேவைகள் நிபந்தனையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *