O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவச போக்குவரத்து வசதி
ரயில் பணிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் நீடித்தால் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவசமாக போக்குவரத்து வசதி வழங்கப்பபடவுள்ளது.
ரயில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் ரயில் பருவ கால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சீருடையுடன் ரயில் பருவ கால சீட்டுக்களை எடுத்து வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் குறித்த இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று(10) நடத்திய செய்தியாளகளுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.