மஹிந்த மற்றும் கோட்டாபய மீது கைவைக்க ஒரு போதும் விடமாட்டோம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் புதிய வீடமைப்பு திட்டமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அண்மையில் பங்கேற்ற போது இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் இடமளிக்காது.
நாட்டில் யார் தேசப்பற்றாளர் யார் தேசத்துரோகி என்பதனை மக்கள் அறிவார்கள்.
நாட்டின் படைத்தளபதிகள் முக்கிய படை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மின்சார நாற்காலி தண்டனை விதிக்க சர்வதேசம் முயற்சித்தது.
சர்வதேச சமூகம் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக இலங்கை மீது தடைகளை விதித்திருந்தது.
படைவீரர்களை மின்சார நாற்காலி தண்டனைக்கு உட்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, படைத்தளபதிகள் மற்றும் படைவீரர்களின் தலைமயிர் ஒன்றைக் கூட சர்வதேச சமூகத்தினால் அசைக்க முடியாது.
இந்த நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்காது என்பதனை பெருமிதத்துடன் கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.rivira.lk/online/2017/12/11/135828