6 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஆறு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஜெகத் பீ. விஜேவீரவும், நீதி அமைச்சின் செயலாளராக எம்.அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளராக டீ.ஜீ.எம்.வீ.ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜெயமன்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.மாயாதுன்னவும், தபால், தபாற் சேவைகள் மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்