தேர்தல் குறித்து இதுவரை 4 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் திகதி முதல் இன்று காலை 06.00 மணி வரையான காலப் பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் விஷேட பிரிவொன்று தற்போது நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.