பல்வேறு பகுதிகளுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மஹரகம, வெலிகம பதுளை, மஹியங்கனை, அகலவத்தை பாணதுறை ஆகிய சபைகளுக்காப வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மஹரகமவில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் குறிப்பிடப்படாமையே நிராகரிக்கப்படக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விடயம் குறித்து தமது கட்சியின் சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு அமைய, நாளை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக. தெஹிவளை – கல்கிசை முன்னாள் தலைவர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெலிகம பகுதிக்கான வேட்பு மனுவில், உரிய அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் இல்லாமையே, நிராகரிக்கப்படக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும், அதுவும் நிராகிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வெலிகம பிரதேசசபையின் முன்னாள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.