• Mon. Oct 13th, 2025

ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்த்து வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

Byadmin

Dec 20, 2017

(ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்த்து வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ட்ரம்பினால் இஸ்ரவேலின் தலைநகரமாக ஜெருசலேம் பெயரிப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி பங்களிப்புடன் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் ( புதிய நகர மண்டபம்) இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலஸ்தீன ஆதரவு சங்கம் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம், இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், நிபுணர்கள் பலரும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஊடக அமைப்பு பிரதிநிதிகள், அமெரிக்க தீர்மானத்திற்கு கண்டனம் வெளியிட்டு கருத்து வெளியிடவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

எதிர்ப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு கண்டனம் வெளியிட்டு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைப்பதற்கான கடிதம் ஒன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளினால் கையொப்பமிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *