• Sat. Oct 11th, 2025

இஸ்ரேலுக்கு அடிபணியும் இலங்கை..?

Byadmin

Jun 6, 2017
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
கட்டாருடனான – மத்திய கிழக்கு நாடுகளின் இராஜதந்திர உறவு துண்டிப்பின் பின்னணியில் அமெரிக்க, இஸ்ரேல் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இலங்கையிலும் – இஸ்ரேல் அகல கால்பதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, சந்திரிக்கா, மஹிந்த ஆட்சி காலங்களின் போது இஸ்ரேல் நாட்டுக்கு ,இலங்கையில் கால்பதிக்க இடமளிக்கப்படவில்லை.
குறைந்தது, இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
இப்போது, இந்த நல்லாட்சியில் தூதரகம் திறக்கப்பட்டு-தூதுவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம்,இலங்கையில்- இஸ்ரேல் தனது செயட்பாடுகளை பகிரங்கமாக முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்தநிலையில்தான், நல்லாட்சியின் பிரதான கட்சியான ஐ. தே.க. வின் எம்பியான முஜிபுர் ரஹ்மான் -பொதுபலசேனாவின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் ஜென்ம விரோதி என அடையாளம் காணப்பட்ட இஸ்ரேல், பொதுபலசேனாவின் பின்னணியில் இருக்கின்றது என்பதை இதனால் மறுதலிக்க முடியாமலும் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த- அவரது ஆட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆட்டத்துக்கு இணங்காமையால்தான் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கூட கிடைக்கவில்லை.
மட்டுமன்றி, அவரது ஆட்சி கூட தூக்கி வீசப்பட்டது.
இந்த நல்லாட்சியில் இப்போது ஜீ.எஸ். பீயும் கிடைத்துள்ளதுடன், விரைவில் ஓரின சேர்க்கையும் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதட்கு ஆதாரமாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் ஓரினசேர்க்கையை அடையாளப்படுத்தும் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதை குறிப்பிடலாம்.
இஸ்ரேல் என்ற நாட்டின் ஊடுருவல் தான் இவ்வளவுக்கும் காரணம்.
கட்டார்- இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்று. அதிகளவான உதவிகளை இலங்கைக்கு வாரி வழங்கிய முஸ்லீம் நாடுகளில் மிக முக்கியமான நாடு. அந்த நாட்டின் உறவையும் விலக்கிக்கொள்ள இலங்கை இப்போது முன்வந்துள்ளதா என்ற கேள்வியைத்தான், விமான நிலையத்தில் இடெம்பெற்றுள்ள சம்பவம் கோடிட்டு காட்டுகின்றது.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு செல்வமிக்க முஸ்லீம் நாடுகளே இப்போது அடிமையாகி உள்ள நிலையில்- பொது பலசேனாவின் அட்டகாசம் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கை முஸ்லிம்கள் எந்த முஸ்லீம் நாட்டிடம் தஞ்சம் கோரமுடியும்?
அடுத்துவரும் தினங்களில் கட்டார் விமானங்கள் இலங்கைக்கு வருவதும் தடை செய்யப்படக்கூடும் நிலையே காணப்படுவதாக இலங்கையில் உள்ள கட்டார் தூதரக அதிகாரி ஒருவர் பிரத்தியேகமாக தனது ஐயத்தையும் அச்சத்தையும் இன்று காலை நேரம் வெளிப்படுத்தினார்.
அத்துடன், இந்த ஐயம் உறுதியானால் கட்டார் வாழ் இலங்கையர் நாடு திரும்புவதில் பெரும் பாதிப்பை எதிர்கொள்வர் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆக மொத்தத்தில்-மியன்மாரில் முஸ்லிம்களுக்கு நடப்பது போன்று – இலங்கை முஸ்லிம்களும் இங்கேயே செத்து மடிய வேண்டியதுதான் என்ற யதார்தத்தைத்தான் இன்றய நல்லாட்சி இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
-ஏ.எச்.எம்.பூமுதீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *