(பொலித்தீன் பாவனை இன்று முதல் முற்றாக தடை)
உக்கிப் போகாத பொலித்தீன் உட்பட பொலித்தீன் உற்பத்தியும் அதன் பாவனையும் இன்று
முதல் முற்றாக தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
முதல் முற்றாக தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தேசிய, மத கலாசார அரசியல் வைபவங்கள் உள்ளிட்ட எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் அலங்கரிப்புக்கென பொலித்தீன் பயன்படுத்துவது இன்று முதல் முற்றாக தடைசெய்யப்படுகிறது.
இதனை மீறிச் செயற்படும் வர்த்தகர்களை கைது செய்ய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்பட இருந்தபோதிலும் அதற்கனெ சலுகைக் கால அவகாசத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.