ஒரு இஸ்லாமியபிரஜை வாழ்நாட்களில் கழிக்கும் சிறப்பானகாலங்களில் றமழான் மாதமும் ஒன்றாககணிக்கப்படுகிறது. தனதுமாற்றத்தைநோக்கியபயணத்தில் ஒருமைல்கள் றமழானாகும். அல்லாஹ்வின் அருள் நிரம்பிவழியும் மாதம்,இவ் அருள்மிகுமாதத்தைசரியானமுறையில் அறுவடைசெய்வதுஒவ்வொரு இஸ்லாமியபிரஜையின்மீதும் கடமையாகும். காலம் கடந்தபின் கைசேதப்பட்டு,கவலைப்படுவதில் எவ்விதபயனும் இல்லை.
உண்மையிலேயே இது அல்குர்ஆனுடையமாதம்,புனிதபத்ர் யுத்தம் நடைபெற்றமாதம் ,ஷைத்தான்கள் விளங்கிடப்படும் மாதம் ,சுவர்க்ககதவுகள் யாவும் திறக்கபட்டுநரகக் கதவுகள் மூடப்படும் மாதம், இரவுத் தொழுகை ஜமாத்துடன் தொழும் மாதம்,ஏழைகளின் பசிஉணரும் மாதம்,அதிகமானபாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்,ஒவ்வொருநட்காரியங்களுக்கும் நன்மைகள் பலமடங்குகொடுக்கப்படும் மாதம்,மற்றும் லைலதுல் கத்ர், இன்னும் ஏராளமானஅல்லாஹ்வின் அருள் மழைபொழிகின்றமாதம். இம் மழையில் நனைவதைவிடஒரு இஸ்லாமியபிரஜைக்குவேறுஎன்னவேண்டும்.
எனதுஅருமை இஸ்லாமியசகோதர,சகோதரிகளேபலறமழான்களைநாம் கடந்துசென்றுவிட்டோம். சென்றவருடம் எங்களோடுறமழான் மாதத்தில் இருந்தவர்கள் சிலர் இவ் வருடம் மண்ணறையைநோக்கிபயணித்துவிட்டார்கள். எமதுவாழ்கையின் அடுத்தநொடிபற்றியஅறிவுஅல்லாஹ்விடம் மாத்திரமேஉள்ளது. அதுமனிதசக்தி,சிந்தனைக்குஅப்பாற்பட்டது.
எனவேஎமக்குகிடைக்கும் சந்தர்ப்பத்தைகுறிப்பாக இவ் றமழானை இஸ்லாமிய ஷரீஆகாட்டித்தந்தவழிமுறையில் பயன்படுத்துதல் அவசியமாகும்.
எனதுபணிவானவேண்டுகோள் குறிப்பாகதாய்மார்களுக்குறமழான் மாதத்தில்சமையலறைக்குள் உங்களைசுருக்கிக்கொள்ளாதீர்கள்.
ஆடம்பரசஹர் மற்றும் இப்தார்களைமுழுமையாகதவிர்ந்துகொள்ளுங்கள்.நோன்பின் உயரியநோக்கத்தைதெளிவாகபுரிந்துகொள்ளவேண்டும். நாம் வயிறுநிரம்பஉணவுஉண்ணமுன் மற்றும் வீண் விரயம் செய்யும் முன் ஒருகனம் எமது இஸ்லாமியசகோதர,சகோதரிகளைபற்றிசிந்திக்ககடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் எமதுநாட்டில் நமதுசில இஸ்லாமியஉறவுகள் வெறும் பேரிச்சம்பழம் மற்றும் பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சுடன் மாத்திரம் நோன்புதிறக்குகிறார்கள்.
இதுவேநாம் சர்வேதேசமட்டத்தைஉற்றுநோக்கிபார்க்கும்போதுயமன்,நைஜீரியா,சோமாலியா,வடக்குசூடான் போன்றநாடுகளில் பசியின் காரணமாகமரணத்தைஎதிர்நோக்கிகொண்டிருக்கும் குழைந்தைகளின் எண்ணிக்கை1.4மில்லியனையும் தாண்டிசென்றுகொண்டு இருக்கின்றது.
சோமாலியாவில் சஹர் உணவுசாப்பிடமற்றும் நோன்புதிறக்கவும் வசதியின்றிபலமயில்கள் நடந்துசென்றுகிடைக்கும் கொஞ்சநீரைமாத்திரம் பருகிநோன்புபிடிக்கும் இஸ்லாமியஉறவுகள் வாழும் உலகத்திலேநாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதைநினைவில்கொள்ளவேண்டும்.
றமழான் மாதம் யாசகர்களுடையஅல்லதுயாசகம்கேட்கும் மாதம் என்றதொனிப்பொருளைஉடைத்தெறியவசதிபடைத்தவர்கள் முன் வந்துதேவையுடையவர்களை இனங்கண்டுஅவர்களைநாடிச்சென்று இஸ்லாமிய ஷரீஆகாட்டித்தந்தவழிமுறையில் உதவிகளைவழங்கவேண்டும். மாற்றமாகயாசகர்களைஉருவாக்கும் வசதிபடைத்தவர்களாகமாறி இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கத்தைபிழையாகவிளங்கிஏழைகளைவரவழைத்துவரிசைப்படுத்தி முழு சமுதாயமேஉற்றுப் பார்க்கும் அளவுக்குகாட்சிப்படுத்திஅந்தஏழைகளின் தன்மானங்களை இழக்கச்செய்துகொடுப்பதன் பெயர் ஸகாத் அல்ல.
ஸகாத் கொடுக்கதகுதிபடைத்த இஸ்லாமியசகோதரர்கள் தயவுசெய்துதுறைசார் இஸ்லாமியஅறிஞர்களைஅணுகிதெளிவைபெற்றுக்கொண்டுநிறைவேற்றினால் சாலச்சிறந்தது.
எனது இஸ்லாமியஉறவுகளேஉங்களுக்குபோதியளவுவசதி இருக்கும்பொழுதுயாராவதுஉங்களுக்குஉதவமுன்வந்தால் அதனைஉங்களைவிடதேவை,தகுதிஉடையவர்களுக்குமுதன்மைப்படுத்திகொடுக்கும் மனஉணர்வைஉருவாக்கபழகிக்கொள்ளுங்கள்.
இயன்றவரைறமழான் மாதத்தில் யாசகம் கேட்டுவருபவர்களுக்குமுகம் சுளிக்காமல் உங்களுக்குமுடியுமானஉதவியைபுன்முறுவலுடன் செய்யுங்கள்.எந்தசெயற்பாடுகள் உங்களைறமழானில்வணக்கவழிபாடுகள் உயிரோட்டமாகஈடுபடாமல் இருக்கதடுக்கிறதோஅவைஅனைத்தையும் கட்டாயம் தவிர்ந்துகொள்ளுங்கள்.
றமழானில் ஒவ்வொரு நாளும் செய்யும் அமல்களின் விகிதாசாரத்தைஅதிகரித்துகொள்ளுங்கள்.
ஒருநாள் செய்தஅமல்களைவிடமற்றநாள் செய்யும் அமல்களைஒருபடிஅதிகரியுங்கள்.
பட்டினையும்இதாகத்தையும் மாத்திரம் உணர்ந்தநோன்பாகஉங்களதுநோன்பைஆக்கிவிடாதீர்கள்.
றமழானைதிறம்படகழிக்கஒருநிகழ்ச்சிநிரல் ஒன்றைதயாரித்துஒழுங்குமுறையில் செய்துவரபழகுங்கள்.
நோன்பாளிக்காகவேமாத்திரம் கட்டப்பட்டுள்ளஅந்தரய்யான் எனும் சுவர்க்கவாயினுள் நான் கட்டாயம் உள் நுழைவேன் எனதன்னம்பிக்கையுடன் இன்ஷா அல்லாஹ் அனைத்துநோன்பையும் நோற்று,மற்றும் எல்லாவணக்கவழிபாடுகளையும் தூய எண்ணத்துடன் புரியமுன்வரவேண்டும்.
நோன்பாளிக்கான கூலியைஅல்லாஹ்வேவழங்குவதாக கூறி,நீங்கள் எதிர்பாத்திராத,உங்கள் சிந்தனைக்குஅப்பாற்பட்டவெகுமதிகள் ,சன்மானங்கள்,உயர்ந்தஅந்தஸ்த்துக்களைவழங்கஅல்லாஹ் காத்திருக்கிறான்.
எனவே அல் குர்ஆன் அருளப்பட்டறமழான் மாதத்தில் அதிகமாகஓதி,நோன்பின் மூலம் இறையச்சமுள்ளஅடியார்களாகமாறி,புனிதலைலதுல் கத்ரைஅடைந்து,நாளையசுவனத்தின் சொந்தக்காரர்களாகஅல்லாஹ் எங்கள் அனைவரையும் ஆக்கிஅருள்வானாக!
As- Sheikh
M.T.M. Imran ( Azhary ) B.A ( Hons)
Diploma in Personality Development