ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ்,
إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين
الراوي:أبو هريرةالمحدث:مسلم – المصدر:صحيح مسلم- الصفحة أو الرقم:1079
ரமழான் வந்துவிட்டால் சுவன வாயில்கள் திறக்கப்படும், நரக வாயில்கள் மூடப்படும், ஷைதான் விலங்கிடப்படுவான் (முஸ்லிம்)1079
இமாம் புகாரியின் ஹதீஸில் صفدت என்பதை سلسلت என்பதாக பல அறிவிப்புகள் வந்துள்ளது. (இரண்டும் ஒரே கருத்தில் உள்ளது)
ரமழான் மாதத்தில் ஷைதான் விலங்கிடப்பட்ட பின்பும் அதே தவறுகள், பாவங்கள் பூமியில் நம் இஸ்லாமிய சமூகத்தில் நடைபெறுகின்றன என்றால் ஷைதான் எங்கே விலங்கிடப்பட்டுள்ளான்?? என்ற கேள்வி பதிலை வேண்டுகிறது.
وفي الصحيحين من حديثه أيضا قال رسول الله صلى الله عليه وسلم: ما من مولود يولد إلا نخسه الشيطان فيستهل صارخا من مس الشيطان إياه.
புகாரி, முஸ்லிமில் பதிவான ஹதீஸில் ஒவ்வொரு ஆத்மா பிறக்கும் போதும் ஒரு ஷைதான் சாட்டப்பட்டு அந்த ஆத்மாவை ஷைதான் தொடுவதினால்தான் பிறக்கும் போது கூச்சலிடுகிறது என்ற கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மனிதனுடன் ஒரு ஷைதான் இருக்கின்றான் என்பது தெளிவு. ரமழானில் ஷைதான் விலங்கிடப்படுகின்றான் என்பதினால் அவன் பாவங்கள் செய்ய காரணமல்ல. என்றாலும் நம் பாவங்கள் தொடர காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதிலானது நம் முக்கிய விரோதி பாவங்கள் செய்யத் தூண்டக்கூடய நம் உள்ளங்களே.
وَمَا أُبَرِّئُ نَفْسِي ۚ إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي ۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَّحِيمٌ (يوسف-٥٣)
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது – என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (யூசுப்-53)
நமது உள்ளம் (நப்ஸ்) பாவங்களை தூண்டக்கூடயதாகவே இருக்கும். அதை கட்டுப்படுத்தும் வரை பாவங்கள் தொடர்ந்துக் கொண்டே இருப்பதில் சந்தேகமில்லை என்பதை இவ்வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
நமது உள்ளங்கள் (நப்ஸ்) இரு வகையானது.
1- அமைதியான உள்ளம் (نفس المطمئنة).
2- பாவங்களை தூண்டக்கூடய உள்ளம் (نفس الأمارة).
அமைதியான உள்ளம் (نفس المطمئنة ) எப்போதும் நன்மையின் பால் எங்களைத் தூண்டி தீய செயல்களை விட்டும் எங்களைத் தடுக்கும்.
அதே போன்று தூண்டக்கூடய உள்ளம் (نفس الأمارة)எங்களை தீய செயல்களின் பால் தூண்டி அதிலே தொடரச் செய்யும்.
இவ்விரு நிலைப்பாட்டையும் கையாலும் தன்மையே ( نفس اللوامة) சிடுசிடுக்கக் கூடிய உள்ளம் எனப்படும்.
அது அமைதியான உள்ளத்தை பாவங்கள் செய்யும் படியும், தீய உள்ளத்தை நன்மை செய்யும் படியும் சபித்துக் (பலித்துக்) கொண்டேயிருக்கும்.
இரு நிலைப்பாட்டுக்கும் மனிதனை மாற்றிக்கூடய தன்மைக் கொண்டதே சபிக்கக்கூடிய (பலிக்கக்கூடிய) உள்ளம் என உஸைமீன் ரஹ்மதுல்லாஹ் பதாவா நூருன் அலத் தர்ப் 5 பாகம் 2 பக்கத்தில் குறிப்பிடுள்ளார்.
அந்த தன்மையை தான் அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டுள்ளான்.
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ (القيامة-٢)
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(கியாமா-2)
இந்த ரமழான் மாத ஷைதான் என்பவன் நிச்சயமாக பாவங்களை தூண்டக்கூடய உள்ளம் (نفس الأمارة) என்பதில் சந்தேகமில்லை.
அதை நாங்கள் அமைதியான உள்ளம் (نفس المطمئنة) நன்மை செய்யும் உள்ளமாக மாற்றுவதே நாம் ரமழானில் பெரும் மிகப்பெரும் பயிற்சியாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!!!