• Sun. Oct 12th, 2025

“ஏரியல் ஷரோனின் மரணம்”

Byadmin

Feb 16, 2018

(“ஏரியல் ஷரோனின் மரணம்”)

“நான் எனது படையினரை அராபிய பெண்களை கற்பழிப்பதற்கு ஊக்கமளிக்கின்றேன். பலஸ்தீன பெண்கள் யூத இனத்தின் அடிமையாக மாறும் வரை இதற்கு ஊக்கமளிப்பேன். அவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியும். ” (ஏரியல் ஷரோன்)

பலஸ்தீனர்களிற்கும், லெபனானியர்களிற்கும் வாழ்வில் மறக்க முடியாத இஸ்ரேலிய பெயர்கள் இரண்டு. ஒன்று “மொஸாட்”. மற்றையது “ஏரியல் ஷரோன்”. மொஸோ தயான், பென்கூரியன், எகூட் பராக், இட்ஷாக் ஷமீர், ஷிமோன் பெரஸ், இன்றைய நெதன்யாகூ என டெல் அவிவின் அதிகாரத்தில் இருந்த தலைவர்களை விடவும் இவரது பெயர் எப்போதும் பலஸ்தீனர்களிற்கு ஞாபகத்தில் நிற்கும்.

ஏன் அவர்களின் இரத்தங்களை உறைய வைக்கும் அளவிற்கு வீரியமிக்க பெயர். பலஸ்தீனர்கள் மீதான ஸியோனிஸத்தின் வெறித்தனமான தாக்குதல்களின் தந்தையே இந்த ஏரியல் ஷரோன். முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தளபதி. இராணுவ அமைச்சர். முன்னாள் பிரதமரும் கூட.

ஏரியல் ஷரோன் இறக்கும் போது அவரிற்கு வயது 85. 2006-ல் மாரைடைப்பு வியாதியின் பின்னர் ஹோமாவில் இருந்து. இரத்த தொற்று வியாதியினால் உடலின் ஹோர்மன்கள் படிப்படியாக செயலிழந்து இறுதியில் ஷெஃபா மெடிக்கல் சென்டரில் மரணமானார். இஸ்ரேலிய சுதந்திர போர், ஆறு நாள் அரபு யுத்தம், சுயஸ் யுத்தம், யோம் கிபுர் யுத்தம் போன்றவற்றில் முக்கயி பங்காற்றியவர் இவர். சொளதேர்ன் கொமாண்ட், பரா ட்ருப்ஸ், யுனிட் 101, கோலானி பிரிக்கேட் போன்றவற்றிற்கு தலைமை தாங்கியவர் இவர்.

“தி புல்டோசர்” என இஸ்ரேலிய அமெரிக்க வட்டாரங்களால் இவர் அழைக்கப்பட்டவர். அராபியர்களால் “த புச்சர்” என இவர் அழைக்கப்பட்டார். பலஸ்தீனத்தில் நிகழ்ந்த கட்டற்ற படுகொலைகளிற்கு இவர் காரணகர்த்தா. “டெல் அவிவ்”, “மக்கா பீஸ்” எனும் இரு கொலைக்குழுக்களை நவீனமயப்படுத்தி பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்களின் உதிரத்தில் தினமும் நீராடிய பாதகன்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ இவரது மரணம் பற்றிய தனது துக்கச் செய்தியில் “ ஏரியர் ஷரோன் போன்ற ஒரு தளபதியை தான் வாழ்நாளில் கண்டதில்லை என்று வியந்துள்ளார். மேஜர் ஜெனரல் ஏரியல் ஷரோன் செய்ததில் பாதியை தான் நாங்கள் அனைவரும் முழு இஸ்ரேலியரும் சேர்ந்து செய்துள்ளோம்” என்று அவரை புகழ்ந்துள்ளார்.

இஸ்ரேல் துணிகரமிக்க இஸ்ரேலின் பெருவீரனை இழந்து விட்டது. அவர் ஒரு பெரும் ஜெனரல். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் இவரை போன்ற ஒரு உறுதியான, யூதர்களையும் இஸ்ரேலையும் நேசித்த தளபதியை கண்டதில்லை. ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1982 லெபனான். செப்டம்பர் 16 முதல் 18 வரை பலஸ்தீன அகதி முகாம்களான Sabra மற்றும் Shatila மீது ஒரு மூன்று நாள் பெரும் படுகொலை நடைபெற்றது. அப்போது ஏரியர் ஷரோன் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். முதல் முகாமில் 800 பேரும் மற்றைய முகாமில் 3500 பேரும் படுகெலையாகினர்.

மேற்கின் மீடியாக்கள் இந்த தொகையை மறைத்து செய்திகள் வெளியிட்டன. இதனை எரியல் ஷரோன் மிகவும் மதிநுட்பத்துடன் செய்து முடித்திருந்தார். முகாமினுள் படுகொலையை செய்தது இஸ்ரேலிய இராணுவம் அல்ல. மாறாக இஸ்ரேலிய அரசால் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்ட கொலைக் குழுக்கள். சில கிறிஸ்தவ குழுக்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பலஸ்தீன பீ.எல்.ஓ. போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கை என்ற பெயரில் யூத படையினர் முகாமை சுற்றி வளைத்து உள்ளே யாரும் செல்லாத வாரும் வெளியே யாரும் வராத வாரும் ஹியூமன் சீலை அமைத்து இந்த படுகொலையை நடாத்தி முடித்து விட்டு எங்களது சிங்கிள் தோட்டா கூட முகாமை நோக்கி சுடப்படவில்லை என சத்தியமிட்டது. இதனை திட்டமிட்டவறே இந்த ஏரியல் ஷரோன்.

சர்வதேச நீதிமன்றம் பற்றியும் மனித உரிமை மீறல் பற்றியும் பேசும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த போர்க்குற்றவாளியை இவர் இறக்கும் வரை தண்டிக்கவில்லை. ஆனால் குர்திஸ்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்று சதாம் ஹுஸைனையும், தனது நாட்டு மக்களை கொன்றார் என்று கேர்ணல் கடாபியையும் கொலை செய்தன. இது தான் உலக நீதி. ஐ.நா.வின் நீதி. ஜனநாயகத்தின் நீதி.

முஸ்லிம்களே இப்போதாவது தேடுங்கள் உங்களிற்கு எந்த நீதி தேவை என்பதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *