• Sat. Oct 11th, 2025

கண்ணாடி இல்லாமலே கூர்மையான கண் பார்வைக்கு இதோ எளிய பயிற்சி!

Byadmin

Feb 24, 2018

(கண்ணாடி இல்லாமலே கூர்மையான கண் பார்வைக்கு இதோ எளிய பயிற்சி!)

கண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும். பார்வை பளிச் என்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும் சீனர்களுக்கு கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் உடற்பயிற்சி போலவே கண்களுக்கு பயிற்சி அளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

அந்த பயிற்சி விவரம் வருமாறு:- முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு கீழே கூறப்பட்டுள்ள பயிற்சிகளை ஒவ்வொன்றாக செய்தால் போதும். கண்ணாடி இல்லாமலே பார்வை பளிச்சிடும்.

பயிற்சி-1. தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும், பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இப்படி 8 முறை செய்ய வேண்டும். எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பார்க்க வேண்டும்.

பயிற்சி-2. தொடர்ந்து மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி-3. கண்களை வலமிருந்து இடமாக கடிகார முட்களைப் போல 8 முறை சுழற்ற வேண்டும். இதேபோல இடமிருந்து வலமாக 8 முறை சுழற்ற வேண்டும்.

பயிற்சி-4. உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் வலமிருந்து இடமாக கண்களால் 8ஐ போடுங்கள். இதையே மாற்றி இடமிருந்து வலமாக செய்ய வேண்டும்.

பயிற்சி-5. உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண் இருப்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 போட வேண்டும்.

பயிற்சி-6- வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும். இதேபோல இடது கண்ணின் மேல் கார்னரையும், கீழ் கார்னரையும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் கண்களை சிமிட்ட வேண்டும்.

இந்த பயிற்சிகள் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக எடுக்க வேண்டும். அப்போது கண்களை சிமிட்டிக் கொண்டே கைகளை எடுக்க வேண்டும். பிறகு முழுமையாக எதிரே உள்ளவற்றை பார்க்கலாம்.

பயிற்சிகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். 30 முதல் 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் உண்டு. கடைசியாக ஒன்று பயிற்சி காலத்தில் மது, புகை கூடாது. இதற்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளலாம் என்று புகை, மதுப் பிரியர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *